Mantra.Tips

கந்த சஷ்டி கவசம் PDF

கந்த சஷ்டி கவசம் की पूरी लिरिक्स — संस्कृत, रोमन व अर्थ सहित। एक क्लिक में PDF सेव करें या प्रिंट करें।

காப்பு துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும், நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை. அமர ரிடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி. நூல் சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார் கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா எண்டிசை போற்றி மந்திர வடிவேல் வருக வருக! வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக! சரவண பவனார் சடுதியில் வருக ரஹண பவச ர ர ர ர ர ர ர ரிஹண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி விநபவ சரஹண வீரா நமோநம நிபவ சரஹண நிறநிற நிறென வசர வணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை ஆளும் இளையோன் கையில் பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும் உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும் கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும் நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும் சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும் குண்டலி யாம்சிவ குகன் தினம் வருக! ஆறு முகமும் அணிமுடி ஆறும் நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகுகுண் டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழ குடைய திருவயி றுந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்தினம் பதித்த நற்சீ ராவும் இருதொடை யழகும் இணைமுழந் தாளும் திருவடி யதனில் சிலம்பொலி முழங்க செககண செககண செககண செகண மொகமொக மொகமொக மொகமொக மொகென நகநக நகநக நகநக நகென டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண ரரரர ரரரர ரரரர ரரர ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா வினோ தனென்று உன் திருவடியை உறுதியென் றெண்ணும் எந்தலை வைத்துன் இணையடி காக்க என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க விழி செவி இரண்டும் வேலவர் காக்க நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை ரத்ன வடிவேல் காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதி னாறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க நாணாங் கயிற்றை நல்வேல் காக்க ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வடிவேல் காக்க பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க கைகளி ரண்டும் கருணைவேல் காக்க முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க நாவில் சரஸ்வதி நற்றுணை யாக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பால் நாடியை முனைவேல் காக்க எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனகவேல் காக்க வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க அரையிருள் தன்னில் அனையவேல் காக்க ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்க தாக்க தடையறக் தாக்க பார்க்க பார்க்க பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை அகல வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள் அல்லற் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும் எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும் கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும் விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டாளர் களும் என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட ஆனை யடியினில் அரும்பா வைகளும் பூனை மயிரும் பிள்ளைகள் என்பும் நகமும் மயிரும் நீள்முடி மண்டையும் பாவைக ளுடனே பலகல சத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும் காசும் பணமும் காவுடன் சோறும் ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட் டலறி மதிகெட் டோட படியினில் முட்ட பாசக் கயிற்றால் கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு கட்டி உருட்டு கைகால் முறிய கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதில் செதிலாக சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால் பற்று பற்று பகலவன் தணலெரி தணலெரி தணலெரி தணலது வாக விடு விடு வேலை வெகுண்டது வோடப் புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம் ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம் சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி பக்கப் பிளவை படர்தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத் தரணை பருஅரை யாப்பும் எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லா தோட நீஎனக் கருள்வாய் ஈரேழு உலகமும் எனக் குறவாக ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும் உன்னைத் துதிக்க உன் திரு நாமம் சரவண பவனே சைலொளி பவனே திரிபுர பவனே திகழொளி பவனே பரிபுர பவனே பவமொளி பவனே அரிதிரு மருகா அமரா வதியைக் காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர்வே லவனே கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை இடும்பனை யழித்த இனியவேல் முருகா தனிகா சலனே சங்கரன் புதல்வா கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா பழநிப் பதிவாழ் பாலகு மாரா ஆவினன் குடிவாழ் அழகிய வேலா செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா சமரா புரிவாழ் சண்முகத் தரசே காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என்நா இருக்க யானுனைப் பாட எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப் பாடினேன் ஆடினேன் பரவச மாக ஆடினேன் நாடினென் ஆவினன் பூதியை நேச முடன்யான் நெற்றியில் அணிய பாச வினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன்னரு ளாக அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமும் மெத்தமெத் தாக வேலா யுதனார் சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் வாழ்க வாழ்க வாரணத் துவசம் வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை அடியேன் எத்தனை செயினும் பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன் பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித் தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய் கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் காலையில் மாலையில் கருத்துடன் நாளும் ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி நேசமுடன் ஒரு நினைவது வாகிக் கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச் சிந்தை கலங்காது தியானிப் பவர்கள் ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு ஓதியே ஜெபித்து உகந்துநீ றணிய அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமன்ன ரெண்மர் செயலாது அருளுவர் மாற்றவ ரல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் நவமதனெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வார் கந்தர்கை வேலாம் கவசத் தடியை வழியாய்க் காண மெய்யாய் விளங்கும் விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்ரு சங்கா ரத்தடி அறிந்தென துள்ளம் அஷ்ட லட்சுமிகளில் வீரலட் சுமிக்கு விருந்துண வாகச் சூரபத் மாவைத் துணித்தகை யதனால் இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி! எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம் மேவிய வடிவுறும் வேலவா போற்றி! தேவர்கள் சேனா பதியே போற்றி! குறமகள் மனமகிழ் கோவே போற்றி! திறமிகு திவ்விய தேகா போற்றி! இடும்பா யுதனே இடும்பா போற்றி! கடம்பா போற்றி கந்தா போற்றி! வெட்சி புனையும் வேலே போற்றி! உயர்கிரி கனக சபைக்கோ ரரசே! மயில்நட மிடுவோய் மலரடி சரணம்! சரணம் சரணம் சரவண பவஓம் சரணம் சரணம் சண்முகா சரணம்! சரணம் சரணம் சண்முகா சரணம்!

Kappu Thuthipporkku Valvinai Pom; Thunpampom; Nènsil Pathipporkkus Sèlvam Paliththuk-kathiththongkum Nishtaiyum Kaikutum, Nimalararul Kanthar Sashti Kavasam Thanai. Amara Ritarthira Amaram Purintha Kumaranati Nènse Kuri. Nul Sashtiyai Nokkas Saravana Pavanar Sishtaruk Kuthavum Sèngkathir Velon Patham Irantil Panmanis Sathangkai Kitham Patak Kinkini Yata Maiyal Natanansèyyum Mayilva Kananar Kaiyil Velal ènaik Kakkavèn Ruvanthu Varavara Vela Yuthanar Varuka Varuka Varuka Mayilon Varuka Inthiran Muthala èntisai Porri Manthira Vativel Varuka Varuka! Vasavan Maruka Varuka Varuka Nesak Kuramakal Ninaivon Varuka Arumukam Pataiththa Aiya Varuka Niritum Velavan Niththam Varuka Sirakiri Velavan Sikkiram Varuka! Saravana Pavanar Satuthiyil Varuka Rahana Pavasa Ra Ra Ra Ra Ra Ra Ra Rihana Pavasa Ri Ri Ri Ri Ri Ri Ri Vinapava Sarahana Vira Namonama Nipava Sarahana Niranira Nirèna Vasara Vanapa Varuka Varuka Asurar Kutikètuththa Aiya Varuka ènnai Alum Ilaiyon Kaiyil Panniran Tayutham Pasang Kusamum Parantha Vizhikal Panniran Tilangka Virainthènaik Kakka Velon Varuka Aiyum Kiliyum Ataivutan Savvum Uyyòli Sauvum Uyiraiyum Kiliyum Kiliyun Sauvum Kilaròli Yaiyum Nilaipèr Rènmun Niththamum òlirum Sanmukan Niyum Thaniyòli Yòvvum Kuntali Yamsiva Kukan Thinam Varuka! Aru Mukamum Animuti Arum Niritu Nèrriyil Ninta Puruvamum Panniru Kannum Pavalassèv Vayum Nannèri Nèrriyil Navamanis Suttiyum Iraru Sèviyil Ilakukun Talamum Ariru Thinpuyath Thazhakiya Marpil Palpu Shanamum Pathakkamum Thariththu Nanmani Punta Navarathna Malaiyum Muppuri Nulum Muththani Marpum Sèppazha Kutaiya Thiruvayi Runthiyum Thuvanta Marungkil Sutaròlip Pattum Navaraththinam Pathiththa Narsi Ravum Iruthòtai Yazhakum Inaimuzhan Thalum Thiruvati Yathanil Silampòli Muzhangka Sèkakana Sèkakana Sèkakana Sèkana Mòkamòka Mòkamòka Mòkamòka Mòkèna Nakanaka Nakanaka Nakanaka Nakèna Tikukuna Tikutiku Tikukuna Tikuna Rararara Rararara Rararara Rarara Riririri Riririri Riririri Ririri Tutututu Tutututu Tutututu Tututu Takutaku Tikutiku Tangku Tingkuku Vinthu Vinthu Mayilon Vinthu Munthu Munthu Murukavel Munthu ènranai Yalum Erakas Sèlva Mainthan Ventum Varamakizhn Thuthavum Lala Lala Lala Vesamum Lila Lila Lila Vino Thanènru Un Thiruvatiyai Uruthiyèn Rènnum ènthalai Vaiththun Inaiyati Kakka ènnuyirk Kuyiram Iraivan Kakka Panniru Vizhiyal Palanaik Kakka Atiyen Vathanam Azhakuvel Kakka Pòtipunai Nèrriyaip Punithavel Kakka Kathirvel Irantum Kanninaik Kakka Vizhi Sèvi Irantum Velavar Kakka Nasikali Rantum Nalvel Kakka Pesiya Vaythanaip Pèruvel Kakka Muppath Thirupal Munaivel Kakka Sèppiya Navais Sèvvel Kakka Kannami Rantum Kathirvel Kakka ènnilang Kazhuththai Iniyavel Kakka Marpai Rathna Vativel Kakka Serila Mulaimar Thiruvel Kakka Vative Liruthol Valampèrak Kakka Pitarika Lirantum Pèruvel Kakka Azhakutan Muthukai Arulvel Kakka Pazhupathi Narum Paruvel Kakka Vèrrivel Vayirrai Vilangkave Kakka Sirritai Yazhakuras Sèvvel Kakka Nanang Kayirrai Nalvel Kakka Anpèn Kurikalai Ayilvel Kakka Pitta Mirantum Pèruvel Kakka Vattak Kuthaththai Vativel Kakka Panaith Thòtai Irantum Paruvel Kakka Kanaikkal Muzhanthal Kathirvel Kakka Aiviral Atiyinai Arulvel Kakka Kaikali Rantum Karunaivel Kakka Munkaiyi Rantum Muranvel Kakka Pinkaiyi Rantum Pinnaval Irukka Navil Sarasvathi Narrunai Yaka Napik Kamalam Nalvel Kakka Muppal Natiyai Munaivel Kakka èppòzhu Thumènai èthirvel Kakka Atiyen Vasanam Asaivula Neram Katukave Vanthu Kanakavel Kakka Varumpakal Thannil Vassiravel Kakka Araiyirul Thannil Anaiyavel Kakka Emaththil Samaththil èthirvel Kakka Thamatham Nikkis Sathurvel Kakka Kakka Kakka Kanakavel Kakka Nokka Nokka Nòtiyil Nokka Thakka Thakka Thataiyarak Thakka Parkka Parkka Pavam Pòtipata Pilli Suniyam Pèrumpakai Akala Valla Putham Valattikap Peykal Allar Patuththum Atangka Muniyum Pillaikal Thinnum Puzhakkatai Muniyum Kòllivayp Peykalum, Kuralaip Peykalum Pènkalaith Thòtarum Piramarat Satharum Atiyanaik Kantal Alarik Kalangkita Irisu Katteri Iththunpa Senaiyum èllilum Iruttilum èthirppatum Annarum Kanapusai Kòllum Kaliyo Tanaivarum Vittang Kararum Mikupala Peykalum Thantiyak Kararum Santalar Kalum ènpèyar Sòllavum Itivizhun Thotita Anai Yatiyinil Arumpa Vaikalum Punai Mayirum Pillaikal ènpum Nakamum Mayirum Nilmuti Mantaiyum Pavaika Lutane Palakala Saththutan Manaiyir Puthaiththa Vansanai Thanaiyum òttiyas Sèrukkum òttiya Pavaiyum Kasum Panamum Kavutan Sorum Othum Ansanamum òruvazhip Pokkum Atiyanaik Kantal Alainthu Kulainthita Marrar Vansakar Vanthu Vanangkita Kalathu Thalènaik Kantar Kalangkita Ansi Natungkita Arantu Purantita Vayvit Talari Mathikèt Tota Patiyinil Mutta Pasak Kayirral Kattutan Angkam Katharitak Kattu Katti Uruttu Kaikal Muriya Kattu Kattu Katharitak Kattu Muttu Muttu Muzhikal Pithungkita Sèkku Sèkku Sèthil Sèthilaka Sòkku Sòkku Surppakais Sòkku Kuththu Kuththu Kurvati Velal Parru Parru Pakalavan Thanalèri Thanalèri Thanalèri Thanalathu Vaka Vitu Vitu Velai Vèkuntathu Votap Puliyum Nariyum Punnari Nayum èliyum Karatiyum Inith Thòtarn Thota Thelum Pampum Sèyyan Puran Kativita Vishangkal Katiththuya Rangkam Eriya Vishangkal èlithutan Irangka òlippun Sulukkum òruthalai Noyum Vathan Sayiththiyam Valippup Piththam Sulaisayang Kunmam Sòkkus Sirangku Kutaissal Silanthi Kutalvip Pirithi Pakkap Pilavai Patarthòtai Vazhai Katuvan Patuvan Kaiththal Silanthi Parkuth Tharanai Paruarai Yappum èllap Piniyum ènranaik Kantal Nilla Thota Niènak Karulvay Irezhu Ulakamum ènak Kuravaka Anum Pènnum Anaivarum ènakka Manna Larasarum Makizhnthura Vakavum Unnaith Thuthikka Un Thiru Namam Saravana Pavane Sailòli Pavane Thiripura Pavane Thikazhòli Pavane Paripura Pavane Pavamòli Pavane Arithiru Maruka Amara Vathiyaik Kaththuth Thevarkal Katumsirai Vituththay Kantha Kukane Kathirve Lavane Karththikai Maintha Katampa Katampanai Itumpanai Yazhiththa Iniyavel Muruka Thanika Salane Sangkaran Puthalva Kathirka Maththurai Kathirvel Muruka Pazhanip Pathivazh Palaku Mara Avinan Kutivazh Azhakiya Vela Sènthinma Malaiyurum Sèngkalva Raya Samara Purivazh Sanmukath Tharase Karar Kuzhalal Kalaimakal Nanray ènna Irukka Yanunaip Pata ènaith Thòtarnthirukkum ènthai Murukanaip Patinen Atinen Paravasa Maka Atinen Natinèn Avinan Puthiyai Nesa Mutanyan Nèrriyil Aniya Pasa Vinaikal Parrathu Ningki Unpatham Pèrave Unnaru Laka Anputan Iratsi Annamun Sònnamum Mèththamèth Thaka Vela Yuthanar Siththipèr Ratiyen Sirapputan Vazhka Vazhka Vazhka Mayilon Vazhka Vazhka Vazhka Vativel Vazhka Vazhka Vazhka Malaikkuru Vazhka Vazhka Vazhka Malaikkura Makalutan Vazhka Vazhka Varanath Thuvasam Vazhka Vazhkaèn Varumaikal Ningka èththanai Kuraikal èththanai Pizhaikal èththanai Atiyen èththanai Sèyinum Pèrravan Nikuru Pòruppathu Unkatan Pèrraval Kuramakal Pèrrava Lame Pillaiyèn Ranpayp Piriya Maliththu Mainthanèn Mithun Manamakizhn Tharulith Thansamèn Ratiyar Thazhaiththita Arulsèy Kanthar Sashti Kavasam Virumpiya Palan Theva Rayan Pakarnthathaik Kalaiyil Malaiyil Karuththutan Nalum Asa Raththutan Angkan Thulakki Nesamutan òru Ninaivathu Vakik Kanthar Sashtik Kavasam Ithanais Sinthai Kalangkathu Thiyanip Pavarkal òrunal Muppath Tharuruk Kòntu Othiye Jèpiththu Ukanthuni Raniya Ashtathik Kullor Atangkalum Vasamayth Thisaimanna Rènmar Sèyalathu Aruluvar Marrava Rallam Vanthu Vanangkuvar Navakol Makizhnthu Nanmai Yaliththitum Navamathanènavum Nallèzhil Pèruvar èntha Nalum Irèttay Vazhvar Kantharkai Velam Kavasath Thatiyai Vazhiyayk Kana Mèyyay Vilangkum Vizhiyar Kana Vèruntitum Peykal Pòlla Thavaraip Pòtipòti Yakkum Nallor Ninaivil Natanam Puriyum Sarva Sathru Sangka Raththati Arinthèna Thullam Ashta Latsumikalil Viralat Sumikku Virunthuna Vakas Surapath Mavaith Thuniththakai Yathanal Irupath Thezhvark Kuvanthamu Thaliththa Kuruparan Pazhanik Kunrini Lirukkum Sinnak Kuzhanthai Sevati Porri! ènaiththatuth Thatkòla ènrana Thullam Meviya Vativurum Velava Porri! Thevarkal Sena Pathiye Porri! Kuramakal Manamakizh Kove Porri! Thiramiku Thivviya Theka Porri! Itumpa Yuthane Itumpa Porri! Katampa Porri Kantha Porri! Vètsi Punaiyum Vele Porri! Uyarkiri Kanaka Sapaikko Rarase! Mayilnata Mituvoy Malarati Saranam! Saranam Saranam Saravana Pavaom Saranam Saranam Sanmuka Saranam! Saranam Saranam Sanmuka Saranam!

कंद षष्टि कवचम् भगवान मुरुगन (कार्तिकेय / सुब्रह्मण्य) की रक्षा हेतु एक तमिल स्तोत्र (कवचम् अर्थात् 'कवच') है, जिसे संत बाल देवरायन (देवराय स्वामिगल) ने रचा। इसका आरंभिक 'काप्पु' वचन देता है कि जो भगवान की स्तुति करते हैं उनके क्रूर कर्म व दुःख दूर भागते हैं, धन व स्थिरता बढ़ती है, और कंद (मुरुगन) की कृपा प्राप्त होती है।